Skip to main content

'விரைவில் வீடு திரும்புவார்; மகிழ்ச்சி'-உடனே நலம் விசாரித்த தமிழக முதல்வர்

Published on 16/03/2025 | Edited on 16/03/2025
'He will return home soon; happy' - Tamil Nadu Chief Minister immediately inquired about his well-being

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக இன்று மாலைக்குள் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியாகலாம். அதன் பின்னரே முழு தகவல் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

'He will return home soon; happy' - Tamil Nadu Chief Minister immediately inquired about his well-being

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'இசைப்புயல் ஏ.ஆர்ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்