Skip to main content

நான் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை: ரஜினிகாந்த் பேட்டி

Published on 14/03/2018 | Edited on 14/03/2018


 

rajini

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். 15 நாட்கள் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்றார். அங்கு குகைகோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ரிஷிகேஷ் பகுதியில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். 

 

rajini

பின்னர் டேராடூனில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், 

தற்போது ஆன்மிக பயணம் மட்டுமே வந்துள்ளேன். எனவே அரசியல் பேசவேண்டிய களம் இது அல்ல. நான் என்னுடைய கட்சி பெயரை அறிவிக்காததால், இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. மனித வாழ்வின் நோக்கமே தன்னை உணர்வது தான். எனக்குள் இருப்பதை உணர, நான் ஆன்மிக வழியில் பயணிக்கிறேன்.

 

rajini

 

rajini



என்னுடைய நண்பரும், நடிகருமான அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் இறந்தது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணம் அடைந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக அரசு ஏதாவது செய்யவேண்டும். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்