National Child Rights Commission receives complaint against Velmurugan under POCSO?

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக மூன்று முதல் மூன்று இடங்களை பிடித்தமாணவர்களை நேரில் அழைத்து கல்வி விருது வழங்கி வருகிறார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என இரண்டு கட்டங்களாகநடிகர் விஜய் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்துப் பாராட்டி கல்வி விருது வழங்கியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மாணவிகளுக்கு கல்வி விருது வழங்குவதை விமர்சிக்கும் வகையிலும், அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களை விமர்சிக்கும் வகையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் பொதுக்கூட்டம் நிகழ்வு ஒன்றில் விமர்சித்துப் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

tvk

Advertisment

வேல்முருகனின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரை கண்டித்தும் வந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் குறித்தும், பெற்றோர்கள் குறித்தும் ஆபாசமாக பேசிய வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது தமிழக ஆளுநர், தமிழக சபாநாயகர் ஆகியோருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.