குமரி மாவட்டம், மார்த்தான்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை 08-ம் தேதி இரவு 8 மணிக்கு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடி வழியாக வாகனங்கள் எதுவும் செல்வது கிடையாது. அப்படி செல்ல வேண்டுமென்றால் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்பட்டாலோ அல்லது போலீசார் சோதனையில் ஈடுபட்டாலோ மட்டும் தான் இந்த சோதனை சாவடி வழியாக வாகனங்கள் செல்லும்.
இதனால் அந்த சோதனை சாவடியில் பணிபுரியும் போலிசாருக்கு எந்த விதமான வேலை பலுவும் இருக்காது. இந்த நிலையில்தான் 08-ம் தேதி இரவு 10 மணிக்கு அந்த சோதனை சாவடியில் வில்சன் பணிபுரிந்து கொண்டியிருந்தபோது கேரளா எல்லையான இஞ்சி விளை சந்திப்பில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த ஸ்கார்ப்பியோ வாகனத்தை அதில் நிறுத்தி விட்டு அதிலிருந்து தலையில் குல்லாவுடன் இறங்கிய இரண்டு வாலிபா்கள் சோதனை சாவடி பக்கம் வந்தனா். அதில் ஒருவன் கையில் இருந்த துப்பாக்கியால் சோதனை சாவடியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை சுட்டார்.
இதில் உடனே சம்பவ இடத்திலே துடிதுடித்து வில்சன் இறந்தார். துப்பாக்கியால் சுட்ட அந்த இருவரும் சாலையில் நிறுத்தியிருந்த அந்த வாகனத்தில் ஏறி செல்வதற்கு முன் அதில் ஒருவா் தலையில் இருந்த குல்லாவை கழற்றினார். இதெல்லாம் அங்கியிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்துக்கு எஸ்பி மற்றும் கலெக்டா் ஆகியோர் உடனே வந்தனா். மேலும் இரவு முமுவதும் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனா். இச் சம்பவம் தமிழகம் முமுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.