Skip to main content

தீக்குளித்த டிரைவரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் கனிமொழி!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

 

போலீசாரின் கண்முன்பே தீக்குளித்த டிரைவரின் குடும்பத்தினரை திமுக எம்பி கனிமொழி சந்திக்கிறார்.
 

நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட கால்டாக்ஸி டிரைவர் மணிகண்டன் என்பவரை, சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, சென்னை - தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசார் ஆபாசமாகத் திட்டி, கடுமையாகத் தாக்கினர். இதில் அவமானமடைந்த மணிகண்டன், போலீசார் கண்முன்பே தீக்குளித்து இறந்தார்.

 

Kanimozhi


 

இதுதொடர்பாக, டிராஃபிக் எஸ்.ஐ. தாமரைச்செல்வன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இறந்த மணிகண்டன்இ, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பம். இவருக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் திமுக எம்பி கனிமொழி, இவருக்கு அரசு நிவாரண நிதி வழங்குவதோடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்று டெல்லியில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு கொடுத்திருக்கிறார்.

 

Manikandan Driver

மேலும், இம்மாதம் வரும் 24ஆம் தேதி மணிகண்டனின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்கு நெல்லை செல்கிறார் கனிமொழி. தமிழக அரசு கைவிட்ட நிலையில் அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்ய நேரில் செல்கிறார். 

-இளையர்

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் காலமானார்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

ANNA UNIVERSITY FORMER VICE CHANCELLOR PASSED AWAY

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (29/05/2021) காலமானார். அவருக்கு வயது 93. 

 

இவர் ஐ.ஐ.டி. கான்பூர் தலைவராகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டுமுறை சிறப்பாகச் செயல்பட்டவர் அனந்தகிருஷ்ணன். பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர நடைமுறைக்கு காரணமானவர் அனந்தகிருஷ்ணன். கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் முயற்சி செய்து வெற்றிபெற்றவர்களில் இவரும் ஒருவர். தமிழில் எழுதும்போது தனது பெயரை ஆனந்தகிருட்டிணன் என்றுதான் அழைக்க வேண்டும் எனச் சொல்வார்.

 

முன்னாள் துணை வேந்தர் மறைவுக்கு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஐ.ஐ.டி. கான்பூர் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றபோதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும், சமுகநீதிக்கான பாதையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். தலைவர் கலைஞர் பெரிதும் மதித்த மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று  குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

வைரஸை உடம்பிலிருந்து வெளியேற்றும் உத்தி! -நம்பிக்கையூட்டும் பேராசியர்

Published on 30/03/2020 | Edited on 31/03/2020

 

நம் தற்காப்பையும் மீறி, நம் உடலுக்குள் கரோனா வைரஸ் புகுந்துவிட்டால் நாம் அடுத்து உடனடியாக என்ன செய்யவேண்டும்? என்பதைச் சொல்லி சற்றே நம்பிக்கை ஊட்டுகிறார் ஒரு வேதியியல் துறைப் பேராசிரியர்.


நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளால், எல்லோரும் திகிலில் உறைந்திருக்கும் இந்த நேரத்தில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறையின் தலைவரான பேராசிரியர் செ.கண்ணன் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

 

ffffஅதில் அவர்... ’கொரோனா வைரஸ் மூக்கு வழியாக உடலினுள் செல்லக் கூடியது. இவ்வாறு மூச்சுக் காற்றில் கலந்து செல்லும் போது முதலில் மூக்கில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும். இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அதற்கு அடுத்த மூக்கு துவாரத்தை விரலால் அழுத்தி பிடித்துக் கொண்டு ஆள்காட்டி விரலை அடைப்பு ஏற்பட்ட மூக்கில் மேல் அழுத்தமாய் வைத்து மூச்சுக் காற்றை வேகமாக வெளியேற்ற வேண்டும். 
 

அப்படி வெளியேற்றும் போது ஆள்காட்டி விரலை விட்டு விட்டு அழுத்த வேண்டும்.  இப்படி அழுத்தும் எண்ணிக்கை ஒரு நொடிக்கு 2 முதல் 4 முறை இருத்தல் அவசியம். இந்த முறையை அரை நிமிட அளவிற்குத் தொடரலாம். அடைப்பின் தன்மையைப் பொறுத்து கால அளவை நிர்ணயிக்கலாம். இவ்வாறு செய்வதால் எடை மிக குறைந்து காற்றின் அழுத்தம் தாங்காமல் மூச்சில் இருந்து வைரஸ் வெளியேறிவிடும்.     
 


இதையும் தாண்டி தொண்டைப் பகுதிக்கு சென்றுவிட்டால், தொண்டையில் அரிப்பு, எரிச்சல் ஏற்படும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்தால் சமையலுக்குப் பயன்படுத்தும் சீரகத்தை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதன் மூலம், வருகின்ற சாறை எரிச்சல் இருக்கும் இடத்தில் படும்படி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது தொண்டையில் இருந்து வைரஸ் வெளியேறிவிடும். 
 

இப்படி செய்யும்போது தண்ணீர் அருந்துதல் கூடாது. இந்த உத்தியைக் கையாண்டால் வைரசை உடலிலிருந்து ஆரம்பத்திலேயே வெளியேற்றிவிடலாம். இந்த வைரஸ் நுரையீரலுக்குச் சென்று விட்டால் அது 14 நாட்கள் தங்கி இருந்து சளி தொல்லை காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். அதற்கு முன்னால் இதை வெளியேற்றி விட்டால் நாம் வைரஸில் இருந்து தப்பித்து விடலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.