Skip to main content

தொடங்கியது பொதுக்குழு கூட்டம் - திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
kutam


திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கலாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், தலைவர் பதவிக்கு போட்டியிட ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அக்கட்சியின் 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்திருந்த வேட்புமனுவை, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலுக்கான அவகாசம் ஞாயிற்றுக்கிழமையோடு முடிந்துவிட்ட நிலையில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினையும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனையும் தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதுகுறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று அறிவிப்பார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சார்ந்த செய்திகள்