ஆன்லைன் மோடிகளை அரங்கேற்ற வெளிநாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பயன்படுத்தப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்துள்ளனர். லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து சைபர் குற்றங்கள் பெருமளவு அரங்கேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது சைபர் கிரிமினல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களைத் தொடர்பு கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்க சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகளை முடக்கும் பணியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்காகத் தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.