Skip to main content

இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 18/11/2024 | Edited on 18/11/2024
New Prime Minister sworn in in Sri Lanka

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இத்தகைய சூலில் தான் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் 225 பேரில், 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இலங்கை மக்கள் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் மீதமுள்ள 29 பேர், நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப வாக்கு அடிப்படையில், வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இதன் மூலம் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் அநுர குமார திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக் கட்சிகள் புதிய சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இன்று (18.11.2024) பதவியேற்றுக்கொண்டது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். வெளி விவகாரத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுக்கொண்டார். மகளிர் மற்றும் சிறுவர் விவகாரத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 13 எம்.பி.க்கள் உட்பட 28 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்