![chennai koyambedu - Corona Special Officer - Inspection](http://image.nakkheeran.in/cdn/farfuture/q77ANJEPM4yPlF6y7v8Hsiwlj3f2VV39NltD6aY6e3g/1588595246/sites/default/files/2020-05/d22_0.jpg)
![chennai koyambedu - Corona Special Officer - Inspection](http://image.nakkheeran.in/cdn/farfuture/eKK2OAq_o2Sv5W8igDBmhYotTEM9I1l-Rjcf47cYSwU/1588595246/sites/default/files/2020-05/d21_0.jpg)
Published on 04/05/2020 | Edited on 04/05/2020
கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று கோயம்பேட்டில் ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கண்டு மக்கள் அஞ்ச தேவையில்லை, ஆனால் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றார்.