Skip to main content

விதிமுறை மீறி ஆடம்பர பங்களா: கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 06/03/2018 | Edited on 07/03/2018
coputr


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிமுறைகளை மீறி ஆடம்பர பங்களாக்கள் கட்டப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் நீதிபதி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டியை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் கடற்கரை அருகே கட்டடம் கட்ட தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியலிங்கம் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடற்கரை அருகே கட்டப்பட்ட ஆடம்பர பங்களாக்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளனவா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிம்டிஏ, மாநகராட்சி அதகாரிகள் 138 கட்டடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் என தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.    

இதனைதொடர்ந்து முன்னாள் நீதிபதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகை ரம்யாகிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சிம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்