Skip to main content

11 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்! - பா.ஜ.க. கடும் பின்னடைவு

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

11 மாநிலங்களில் நடந்துமுடிந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
 

Election

 

நாடு முழுவதிலும் ஆட்சியை நிறுவும் குறிக்கோளுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பா.ஜ.க. தேர்தல்களில் நேரடியாகவும், கூட்டணிகளின் வாயிலாகவும் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க.வின் ஆட்சி நிறைவடைய இன்னும் ஓர் ஆண்டே இருக்கிறது. இந்த குறுகிய காலகட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல்களில் வெற்றியைப் பதிவுசெய்வதன் மூலமாகவே, 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமையும்.
 

இந்நிலையில், கர்நாடகா, மேற்கு வங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள நான்கு மக்களவை மற்றும் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. 
 

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டு மக்களவை மற்றும் ஒரேயொரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றன. குறிப்பாக இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஆர்.ஆர்.நகர், கோண்டியா, கைரானா, நூர்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியிருக்கிறது. பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்