மிக அழகானதும், பழைமையானதுமான தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் ‘பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தேர்வுகள் குறித்து சில விவாதங்கள் நடைபெற்றன. மேலும், மாணவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

Modi

அப்போது தமிழ்மொழி குறித்து பேசிய அவர், ‘தமிழமொழி பழைமையானது. அது சமஸ்கிருதத்தை விடவும் பழைமையானது மட்டுமின்றி, அழகானது. எனக்கு அந்த மொழியில் ‘வணக்கம்’ என்று மட்டுமே சொல்லத்தெரியும். அதைத் தவிர வேறு எதுவும் அதில் தெரியாதது வருத்தம் அளிக்கிறது’ எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் மோடி இந்தியிலேயே பேசினார். மேலும், ‘மற்ற மொழிகளில் நான் பேசாமலிருப்பதற்காக என்னை மன்னிக்கவேண்டும்’ என மாணவர்களிடம் அவர் கூறினார். அதேபோல், தனது பேச்சு பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.