Skip to main content

‘யார் அந்த தம்பி?’ - பரபரப்பை கிளப்பிய அதிமுக!

Published on 20/05/2025 | Edited on 20/05/2025

 

‘Who is that brother?’ poster AIADMK creates a stir

டாஸ்மாக் இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில், ‘யார் அந்த தம்பி?’ என்று போஸ்டர் ஒட்டியும் ஹேஸ்டேக் போட்டும் அதிமுகவினர் டிரெண்டிங் செய்துவருகிறார்கள்.

அண்மையில் டாஸ்மாக் எம்.டி. விசாகன், உதயநிதியின் நண்பர்களான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது விசாகன் இல்லம் அருகே வாட்ஸ் ஆப் உரையாடல்களின் நகல்கள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதில், 'டியர் தம்பி' என்று வாட்ஸ் ஆப் உரையாடல்கள் தொடங்குகின்றன.

இதனை வைத்தும், டாஸ்மாக்கில் ரத்தீஷ் உத்தரவுப்படியே செயல்பட்டதாக விசாகன் கூறியதாக வெளியாகும் வாக்குமூலத்தையும் கேள்வி கேட்கும் வகையில் 'யார் அந்த தம்பி?' என்ற போஸ்டர் அதிமுகவினரால் தமிழகம் முழுக்க ஒட்டப்பட்டுள்ளன. முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் ஒரு சாருடன் போனில் பேசியதாக மாணவி தனது புகாரில் தெரிவித்திருந்தார். அதை வைத்து, 'யார் அந்த சார்?' என்ற கேள்வியை ஆளும் திமுகவை நோக்கி எழுப்பியது வைரலாக மாறியது.

அதே பாணியில் இப்போது டாஸ்மாக் விவகாரத்தில் 'யார் அந்த தம்பி?' பிரசாரத்தை அதிமுக முன்னெடுத்திருக்கிறது. சென்னை, சேலம், மதுரை மற்றும் தமிழகம்  முழுக்க, 'யார் அந்த தம்பி?' என்று பெரிதாக கேள்விக்குறி போட்டுள்ளனர். அதன்கீழே 'டாஸ்மாக் காசு... எந்த தம்பிக்கு போச்சு?' என்று ஒரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இன்று இந்த போஸ்டரால் பரபரப்பு எழுந்துள்ளது.

சார்ந்த செய்திகள்