Skip to main content

ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு... முற்றுகை போராட்டம்! 

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

காடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த சோழத்தரம் அருகிலுள்ள கொண்டசமுத்திரம் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் கணக்கெடுப்பு நடத்தியதில் விதவைகள், வறுமை கோடு பட்டியலின் கீழ் உள்ளவர்கள், நிலம் மற்றவர்கள், குடி மனைப்பட்டா இல்லாதவர்கள் என அனைவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

 

'goats supplying' scheme- Siege struggle!

 

இந்த ஊராட்சியில் 102 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயனாளிகள் தேர்வில் நிலம் உள்ளவர்கள், நீர் மோட்டார் உள்ளவர்கள், அரசு ஊழியர் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் உள்ளது. இதற்கு மாறாக இந்த கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் 40 குடும்பத்தினரில் ஒருவருக்குக்கூட ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாக இல்லை., எனவே உண்மை பயனாளிகளை கணக்கெடுக்க வேண்டும் தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் பயனாளிகளிடம் ரூ 2 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என அந்த கிராமத்தில் கூறப்படுகிறது. எனவே உண்மை பயனாளிகளை கண்டறிந்து இலவச ஆடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள்  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் வட்டச்செயலாளர் வெற்றிவீரன், வட்ட துணை செயலாளர்  குமார் உள்ளிட்ட பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள் உண்மை பயனாளிகளை பட்டியல் தயார் செய்து இலவச ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 3- ந்தேதி  காலை 11 மணிக்கு காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ன அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்