Ajith survives car racing accident

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் இயக்கிய காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மொத்தம் 43 கார்கள், சுழற்சி முறையில் 83 ஓட்டுநர்கள் கார் பந்தயத்தில் கலந்து கொண்டனர். நடிகர் அஜித்குமார் கார் இயக்கிக் கொண்டிருந்த பொழுது, போட்டி ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே காரின் வலது புறம் முன்பக்க டயர் வெடித்தது. நடிகர் அஜித்குமார் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். ஏற்கனவே இதுபோன்ற கார் பந்தயங்களில் ஏற்பட்ட விபத்துகளில் அவர் தப்பி இருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து அஜித்குமாரின் பந்தய கார் டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.