
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு சூர்யகலா என்ற மகள் உள்ளார். சூர்யகலா, கள்ளக்குறிச்சி செக்கு மேட்டுத் தெருவில் உள்ள தனியார் கிளிகிக்கில் பயிற்சி செவிலியராக இருந்து வந்தார். அந்த வகையில் சூர்யகலா வழக்கம்போல் இன்று கிளிகிக்கிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி காளிக் கோயில் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாணவி சூர்யகலா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்த தகவல் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டதது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செவிலியர் மாணவி சூர்யகலாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தகவலின் பேரில் வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரையும் கலங்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.