Skip to main content

சிறை கைதிகளுக்கு மோர் வழங்கும் திட்டம்; வேலூர் மத்திய சிறையில் தொடக்கம்!

Published on 22/04/2025 | Edited on 22/04/2025

 

Scheme to provide buttermilk to prisoners in Vellore Central Jail

தமிழகத்தில்  கோடை காலம் தொடங்கி பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் பணியாற்றும் அனைத்து சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டார். 

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறை, பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் மோர் மற்றும் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த, மோர், தண்ணீர் ஆகியவை கோடை காலம் முடியும் வரை காவலர்களுக்கு வழங்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, வேலூர் மத்திய சிறையில்  காவலர்களுக்கான மோர் பந்தலை அமைத்து சிறைக்கு கைதிகளை அழைத்து வரும் காவலர்களுக்கும் மோர் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். அதைத்தொடர்ந்து வேலூர் மத்தியச் சிறையில் உள்ள ஒவ்வொரு பிளாக்கில் கோடை காலத்தையொட்டி கைதிகளுக்கு தினமும் மோர் குடிப்பதற்கு வழங்கப்படுகிறது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

சார்ந்த செய்திகள்