
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 761 பயனாளிகளுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், “நீட் ரகசியம் எங்களுக்குத் தெரியும் எனக் கூறி தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்த திமுகவால் 22 மாணவர்கள் உயிர் நீத்ததாக திமுக அரசைக் கண்டித்து நேற்று முதல் அதிமுக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களுக்கு தைரியம் இருந்தால் இது பற்றி சட்டசபையில் பேசட்டும் என்றார்"
2026-இல் இறைவன் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தது குறித்து கேட்டதற்கு, “ஐயோ பாவம்..” எனச் சிரித்தபடி பதிலளித்துச் சென்றார்.