Published on 11/06/2021 | Edited on 11/06/2021

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட முன்களப்பணியாளர்கள் 300 பேருக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி, காய்கறிகளை சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் வழங்கினார்.
சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகராட்சி பொறியாளர் மகாராஜன், திமுகவின் மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.என். குமார், திமுகவின் தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, நகராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், மின் பிரிவு கண்காணிப்பாளர் சலீம், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.