
சென்னை திருவொற்றியூரில் இருந்து ராமபுரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில், ராமபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள் 3 பேர், செக்யூரிட்டி ஒருவர் என 4 பேரை அழைத்துக் கொண்டு கார் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் காரில் இந்த பயணத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இந்த கார் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் இருந்த 5 பேரில், பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே சமயம் இந்த விபத்து ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது விபத்துக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாகக் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கத்திப்பாரா மேம்பால தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.