Skip to main content

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜன.22ல் அறிவிப்பு?

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

k;l

 

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் துரித கதியில் செய்து வருகிறது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகள் இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில், வரும் 24ம் தேதி உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் அதற்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் 22ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை வெளியிடும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்