
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியதும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி எழுதுபொருள் அச்சு, மனித வள மேலாண்மைத் துறைகள் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராக் ஆகியோர் பதிலளித்து கொண்டிருந்தனர். அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எழுந்து, ‘மூத்த அமைச்சர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது துறை சார்ந்த அரசு அதிகாரிகள் யாருமே சட்டப்பேரவையில் இல்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அது குறித்து பேசிய சபாநாயகர், “அரசு அதிகாரிகளுக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டது. அறைக்கு அழைத்து அதிகாரிகளுக்கு விளக்கமாக கூறினேன். ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. இன்றைக்கு யாரும் இல்லை” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது, “அமைச்சர்களை அரசு அதிகாரிகள் மதிக்க வேண்டும்” என்றி காட்டமாக பேசினார்.