Skip to main content

மம்தா - கனிமொழி சந்திப்பு! - மூன்றாம் அணி குறித்த பேச்சுவார்த்தையா?

Published on 27/03/2018 | Edited on 27/03/2018

2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணி ஒன்றை அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்புவிடுத்து வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 

 

Kanimozhi

 

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்த சந்திரசேகர ராவ், இந்தக் கூட்டணியின் பெயர் கூட்டாச்சி முன்னணி என அறிவித்தார். சந்திரசேகர ராவ்வின் இந்த மூன்றாம் அணி கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

 

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் சரத் பவார், கனிமொழி, சஞ்சய் ராவத், மிர்சா பாரதி உள்ளிட்டோருடன் மம்தா பானர்ஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த சந்திப்பில் அரசியல் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது’ என தெரிவித்தார். மேலும், மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி மீண்டும் பதவியேற்கும் நிகழ்வில், திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கனிமொழி அதில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்