Skip to main content

வான்கோழி ; மயிலாக சித்தரிப்பு! மத்திய பட்ஜெட் குறித்து மு.தமிமுன் அன்சாரி கருத்து!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

மக்களவையில் 05.07.2019 வெள்ளிக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
 

அதில், ''மத்திய பாஜக அரசின் 2019 - 20 ஆம் ஆண்டிற்கான புதிய பட்ஜெட் , பொதுவான கவர்ச்சி அம்சங்களை கொண்டதாகவே இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு வெளியிட்ட அறிவிப்புகளை திரும்பி பார்ப்பவர்களுக்கு இது நன்றாகவே புரியும். 


  thamimun ansari - nirmala sitharaman



சில்லறை வணிகர்களுக்கு ஓய்வூதியம், வருமான வரி உச்சவரம்பை  5 லட்சமாக உயர்த்துதல், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பசுமை வழி சாலைகள் அமைக்கப்படும் என்பது போன்ற ஒரிரு அம்சங்களை தவிர மற்றவை அலங்காரங்களாகவே உள்ளது.
 

பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்த, இப் பட்ஜெட்டில் பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கிறது. விவசாய கடன்கள், கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் பொய்த்திருக்கிறது.
 

புதிய வேலை வாய்ப்புகள் குறித்து உத்திரவாத அறிவிப்புகளும் ஏதுமில்லை. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பும் இல்லை. சிறுபான்மையின மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை. நதி நீர் இணைப்புக்காக தனி  நிதி ஒதுக்கப்படவும் இல்லை.
 

மேலும், பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்வு என்பது நேரடியாக மக்களை பாதிப்பதோடு, விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இது மேலும் இன்னல்களை தரும்.


 

அது போல் தங்கத்தின் மீதான வரி உயர்வு , சாமன்ய மக்களையும், எளிய மக்களையும் மிகவும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், உலகிலேயே தங்க நகைகள் வாங்கும் கலாச்சாரம் இந்தியர்களிடம் தான் அதிகம் உள்ளது.
 

இதில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் இருக்கும் சில அறிவிப்புகள் கவலையளிக்கிறது. இது புதிய இந்தியாவை பற்றிய கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் இது பற்றாக்குறை பட்ஜெட்டாகவும், வரி சுமை மிக்க பட்ஜெட்டாகவும் இருக்கிறது. வான்கோழியை மயிலாக சித்தரிக்கும் முயற்சியாக இந்த பட்ஜெட் இருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது'' என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.