Skip to main content

சிக்னலில் நிற்கும் போது ஹாரன் அடித்தால் காத்திருப்பு நேரம் அதிகரிக்கும்... எங்கே தெரியுமா..?

Published on 03/02/2020 | Edited on 04/02/2020

சிக்னல் நிற்கும்போது சிலர்  ஹாரன் அடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். சிக்னலில் பச்சை விளக்கு எரிய 10, 15 வினாடிகள் இருக்கும்போதே அவர்கள் இந்த சத்தத்தை எழுப்புவார்கள். அவர்களுக்காகவே தற்போது மும்பை போலிசார் புதிய முறையை சிக்னல் விளக்குகளில் புகுந்தியுள்ளார்கள். அதன்படி, தேவையில்லாமல் சாலையில் ஹாரன் அடித்தால் அதனுடைய நேரம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் செட்டிங்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

 

 


தி பினிஷிங் சிக்னல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, டிராபிக் சிக்னல் உடன் புதிய டெசிபெல் கருவிகளை போலிசார் பொருத்தியுள்ளனர். அதன்படி சிவப்பு விளக்கு எரிவதற்கு முன் யாராவது சாலையில் காத்திருப்பவர்கள் ஒலி எழுப்பினால் மீண்டும் சிவப்பு விளக்கு முதலில் இருந்து எரிய ஆரம்பிக்கும். இதனால் மீண்டும் சாலையில் நிற்பவர்கள் முதலில் இருந்து காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த திட்டத்தால் தற்போது சாலையில் யாரும் ஒலி எழுப்புவதில்லை என்று மும்பை போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Traffic diversion on OMR Road

சென்னை ஓஎம்ஆர் சாலையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஓஎம்ஆர் சாலையில் சோதனை அடிப்படையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

மேலும் காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ்காந்தி சாலையில்) திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையிலிருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய ‘யூ’ திருப்பத்தில் (U Turn) சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திருத்தப்பட்ட அபராதம்; தீவிர சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்துக் காவலர்கள் (படங்கள்) 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

இன்று முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. விதி முறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது உடனடி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அரும்பாக்கம் அண்ணா நூற்றாண்டு வளைவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறிய நபர்களிடம் அபராதம் வசூலித்தனர்.