Published on 01/12/2018 | Edited on 01/12/2018

இந்தியாவின் அனைத்து மாநில விவசாயிகளும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தினர். இதில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், ஃபருக் அப்துல்லா ஆகியோரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். அந்த பேரணியில் பங்கேற்ற விவசாயிகள், இந்த விவசாயத் தொழில் எங்களோடு போகட்டும் எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டாம், எங்கள் பிள்ளைகளாவது நன்றாகப் படித்து, வேறு வேலைகளுக்குச் சென்று நன்றாக இருக்கட்டும் என கண்ணீருடன் கோஷங்கள் எழுப்பினர்.