தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணை பிப்ரவரி மாதத்தில் வெளியாகிறது. தேர்தலுக் கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஜனவரி மாதம் சசிகலா வெளியே வந்தால் எங்களுக்கு நிறைய தொல்லை கொடுப்பார். அதனால் இந்த தேர்தல் முடியும் வரை சசிகலா வெளியே வரக் கூடாது. அதற்காக அவர் மேல் புதிய வழக்குகள் போட்டு, தேர்தல் முடியும் வரை சிறைக்கம்பிக்குள்ளே வைத்திருக்க வேண்டும்'' என புதிய கோரிக்கையை எடப்பாடி மத்திய பா.ஜ.க. அரசுக்கு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் சசிகலா பினாமியாக இருந்த ரூபாய் 2000 கோடி சொத்துக்கள் முடக்கப் பட்டன. அதற்கான நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பியது. அதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ ரது பெயர்களுடன் தீபா, தீபக் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
சிறுதாவூர் பங்களாவில் அந்த நோட்டீஸின் ஒரு காப்பி ஒட்டப்பட்டது. அதில், தீபா மற்றும் தீபக் பெயர் இடம்பெற்றது ஏன் என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த சொத்துக்கள் எல்லாவற்றிலும் ஜெயலலிதா பங்குதாரராக இருக்கிறார். அதனால் அவரது வாரிசுகளான தீபாவுக்கும், தீபக்குக்கும் நோட்டீஸ் அனுப்பினோம் என விளக்கம் அளித்தது வருமான வரித்துறை.
சிறுதாவூர் பங்களா, 1991ஆம் ஆண்டு பரணி பீச் ரிசார்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் சசிகலா மற்றும் அவர் களது உறவினர்களால் வாங்கப்பட்டது. 115 ஏக்கர் பரப்புள்ள அந்த பங்க ளாவில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்குவார்கள். அதேபோல் 906 ஏக்கர் பரப்பளவு உள்ள கொடநாடு எஸ்டேட்டை 1994ஆம் ஆண்டு பீட்டர் ஜோன்ஸ் என்கிற இங்கிலாந்து நாட் டைச் சேர்ந்தவ ரிடம் இருந்து சசிகலா மற்றும் ஜெயலலிதா வாங்கினர். 1991ல் இருந்து 1996 வரை எந்த தொழிலும் வருமானமும் இல்லாத சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பல்வேறு சொத்துக்களை வாங்கினார்கள். இவையெல்லாம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து ஊழல் செய்து சம்பாதித்து கொடுத்தப் பணம் என ஜான்மைக்கேல் டிகுன்கா வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்ப்பு வழக்கில் தீர்ப்பளித்தார்.
அவரது தீர்ப்பை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. ஜான்மைக்கேல் டிகுன்கா போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநாடு உள்பட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கிய சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார். அதையும் சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இந்த சொத்துக்களை கையகப்படுத்தி அரசு சொத்தாக மாற்ற வேண்டிய வேலை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை செய்ய வேண்டியது.
ஜான்மைக்கேல் டிகுன்காவின் கோர்ட்டில் மனு செய்து இந்த சொத்துக்களை ஒரே நாளில் அரசு சொத்துக்களாக மாற்றிவிட முடியும். அத்துடன் பெங்களூரு கோர்ட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் நகைகளை அரசு உடைமையாக கொண்டு வந்துவிட முடியும். இந்த வேலைகளை எடப்பாடி தலைமையிலான அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை செய்யவில்லை. ஆனால் மத்திய michaeldeஅரசின் வருமான வரித்துறை பினாமி ஒழிப்பு சட்டத்தின் 24/3 பிரிவின்படி ஏற்கனவே அரசுடைமையான சொத்துக்களை பறிமுதல் செய்கிறது.
இது வேடிக்கையிலும் விநோதமான வேடிக்கை என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள். ஜெயலலிதாவுடன் சேர்ந்து இந்த சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தார் என தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் சொத்துக்களை மறுபடியும் பினாமி சட்டத்தில் வருமான வரித்துறை இணைப்பது ஏற்கனவே செத்துப்போன ஒருத்தனுக்கு மறுபடியும் தூக்குத்தண்டனை விதிப்பதாகும் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசும் சசிகலாவின் வழக்கறிஞர்கள், ""சட்டப்படி இப்படி செய்யவே முடியாது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படும்போது, அந்த கட்சியின் பெரிய தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை அவரது வாரிசுகள் எனப்படும் தீபாவுக்கும், தீபக்குக்கும் நோட்டீஸ் அனுப்பி மத்திய அரசின் வருமான வரித்துறை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைப்பற்றியிருப்பது சட்டப்படி செல்லாது'' என்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசும் சசிகலாவின் உறவினர்கள், ""இது எடப்பாடி திட்டமிட்டு செய்த சதிச்செயல். எடப்பாடிக்கு நெருக்கமான வருமான வரித்துறை அதிகாரிகளைவிட்டு அவர் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படும் தினத்தன்று சசிகலா மேல் மத்திய ஆளும் பாஜக அரசு கோபத்துடன் இருப்பதாக கட்சிக்காரர்களுக்கு காட்டுவதற்காக இந்த நாடகத்தை எடப்பாடி நடத்தியிருக்கிறார். சசிகலா உறவினர்கள்மீது கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் சசிகலாவின் உறவினர்களான திவாகரன், தினகரன், விவேக், கிருஷ்ணப்பிரியா, புலவர் கலியபெருமாள், ராவணன் என 33 பேர் வீடுகளில் ரெய்டு நடத்தப் பட்டது. அந்த 33 பேர் மீதும் இதுவரை வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் 7ஆம் தேதியை இந்த நடவடிக்கை வரும் தேதியாக திட்டமிட்டு நாடகம் நடத்தியிருக்கிறார் எடப்பாடி.
இதற்கும் பாஜக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவையெல்லாம் எடப்பாடிக்கு நெருக்கமான எட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் செய்த வேலை. இந்த அறிவிப்பால் டென்ஷன் ஆன சசிகலா, ""அந்த 8 வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோத மாக ஏற்கனவே கோர்ட்டால் ஜெ. பெயரில் இருக்கிறது என கைப்பற்றப் பட்ட சொத்துக்களை எனது பினாமி சொத்துக்கள் என நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஜெ.வின் உடன் பிறவா சகோதரி சசிகலா, ஜெ.வுடன் சேர்ந்து சொத்து சேர்த்தார் என உலகத்திற்கே தெரியும். அதற்காக நான் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே எடப்பாடியின் பேச்சைக் கேட்டு தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்'' என சசிகலா பா.ஜ.க.வுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதேநேரம், மத்திய பா.ஜ.க. துணையில்லாமல் எடப்பாடி விருப்பப்படி எப்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற அ.தி.மு.கவினரோ, சசிகலாவை தேர்தல் முடியும் வரை வெளியே விடக்கூடாது என மோடியிடம் எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார் என்கிறார்கள்.