Published on 14/05/2018 | Edited on 14/05/2018
பிரதமர் நரேந்திரமோடி தற்போது யோகா ஆசிரியராக உருவெடுத்துள்ளார். வாரம் ஒரு யோகா வீதம் கற்பிக்கப்படுகிறது. இவரே நேரில்வந்து கற்றுத்தருகிறாரா என்றால், இல்லை என்பதுதான் பதில். மோடியைப் போன்ற ஒரு அனிமேஷன் உருவம்தான் கற்றுத்தருகிறது. இதில் ஆசனம் எப்படி செய்யவேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன, யார் செய்யக்கூடாது உள்ளிட்ட முழு விளக்கங்களும் அடங்கிய ஒரு டுடோரியல் போன்று உள்ளது. இந்த வீடியோ அவரது ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்படுகிறது. சில வருடங்களாக யோகா மக்களின் மீது திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.