Skip to main content

ஜெ.வின் சொத்து வந்து விட்டால் மொத்த பணத்தையும் செட்டில் செய்து விடுவேன்...

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைந்ததும் அ.தி.மு.க. வைக் காப்பாற்றப் போவதாக கிளம்பி, ஓரங்கட்டப்பட்டதால் புதிய கட்சியை ஆரம்பித்து, அந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியாமல் கலைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் ஜெ. அண்ணன் மகள் தீபா. தொண்டர்கள் கொடுத்த தொந்தரவுதான் இந்த முடிவுக்குக் காரணமென்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த தீபா, ""அரசியலுக்கு வந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. என்னை வழி நடத்த சரியான நபர்கள் யாருமில்லை. இனிமேல் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டேன். என் வீட்டின் முன்நின்று கட்டாயப்படுத்தியதாலேயே அரசியலில் நுழைந்தேன்''’என்று குறிப்பிட்டவர், "ஜெ.வின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட்ட தில்லை' என்றும் எழுதி யிருந்தார். இதை மறுக்கும் "எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யின் நிர்வாகிகள், ""கட்சிக்காக பணத்தைக் கொட்டியவர்களின் நிலை யை யோசிக்காமல் தீபா இந்த முடிவை எடுத்திருக்கிறார்'' என்று குற்றம்சாட்டுகின்றனர்.
 

sasikala



காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈ.சி.ஆர். ராம சந்திரன், பல பொய்களைச் சொல்லி ரூ.75 லட்சத்தை வாங்கி தீபா ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். இவரைப் போலவே பணத் தைக் கொட்டியவர்கள் ஒன்றுகூடி கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதுதான், கட்சியைக் கலைக்கும் நெருக்கடிக்கு தீபாவைத் தள்ளியிருக்கிறது. "ஜெ.வின் சொத்து வந்து விட்டால் மொத்த பணத்தையும் செட்டில் செய்து விடுவேன்' என்று வாக்குறுதி தந்திருக்கிறார் தீபா என்கிறார்கள். ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா, "சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அனுபவிக்கும் சொத்துகள் அனைத்துமே, ஜெ.வால் சம்பாதிக்கப் பட்டவை'’என்று குறிப்பிட்டார். தற்போது "அந்த சொத்துகளை எம்.ஜி.ஆரின் சொத்துகளைப் போலவே அரசே பராமரிக்கவேண்டும்' என்று புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 

admk



இந்நிலையில், பத்திரிகையாளரிடம் பேசிய தீபா, "அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள் எல்லாம், ஜெ. சொத்து தொடர்பாக வழக்குப் போடுகிறார்கள். அவரை முடிந்தால் அடிப்படை உறுப்பினர் கார்டைக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்''’என்றார். புகழேந்தியிடம் இதுதொடர்பாக கேட்ட போது, 5 வயதிலிருந்து கொடி ஒட்டி, போஸ்டர் ஒட்டி அரசியலுக்கு வந்தவன் நான். 1987-ல் ஜெ.அணியில் உறுப்பினர். 2009-ம் ஆண்டு விருகை பகுதி செயலாளராகவும், 2015-ல் சென்னை தெற்கு மா.செ.வாகவும் இருந்திருக் கிறேன். 1972-ல் எம்.ஜி.ஆர். எங்கள் பரங்கிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, கட்சியிலிருந்து அவரை கலைஞர் வெளியேற்றியதற்காக என் பெற் றோர் ஆயிரம் பேருடன் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்கள். பிறகு தான் அ.தி.மு.க. உதயமானது. அம்மா, தீபாவை அருகிலேயே சேர்க்கவில்லை'' என்றவர், அடிப்படை உறுப்பினர் கார்டை நம்மிடம் காட்டினார்.

இதுபற்றி தீபாவிடம் கேட்டபோது பேச மறுத்து விட்டார். இந்த வழக்கு கைமீறிப் போனால், சொத்து கைவிட் டுப் போகும் என்ற அச்சத்தில் தான் ஆரம்பத்தில் இருந்தே தீபாவின் சகோதரர் தீபக்கை தன்வசம் வைத்திருந்தார் சசிகலா. தற்போது தீபாவும் சசி பக்கம் சாய்ந்திருக்கிறார்.