Skip to main content

அமித்ஷாவை பதற வைத்த ராகுல் காந்தி... தேர்தல் முடிவால் ஆடிப் போன பாஜக... காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல்?  

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

"ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அடைந்த வெற்றி, இந்திய அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது' என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 பாராளுமன்றத் தொகுதிகளில் 12 பாராளுமன்றத் தொகுதிகளை பா.ஜ.க. வென்றது. மொத்தமுள்ள வாக்குகளில் 56 சதவிகித வாக்குகளை பெற்றது. ஏழு மாதங்களுக்கு பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 81 சட்ட மன்றத் தொகுதிகளில் 25-க்கும் குறைவான தொகுதிகளைத்தான் பெற்றுள்ளது. ஒரு பாராளுமன்றத்திற்கு 6 தொகுதிகள் என கணக்கிட்டால் 12 தொகுதிகளை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பா.ஜ.க. வெறும் நாலரை பாராளுமன்றத் தொகுதிகளை பெற்றிருக்கிறது. அத்துடன் 20 சதவிகித ஓட்டுக்களை பா.ஜ.க. இழந்துள்ளது. இத்தனைக்கும் பா.ஜ.க. கடந்தமுறை அதன் கூட்டணியில் இருந்த "அகில இந்திய ஜார்கண்ட் மாணவர் சங்கம்' என்கிற ஒரு கட்சியை மட்டும் தவிர்த்துவிட்டு தனியே போட்டியிட்டது.

 

congress



...மாறாக காங்கிரஸ், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்ட "ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா' லாலுவின் "ராஷ்ட்ரிய ஜனதா தளம்' ஆகிய கட்சிகளுடன் கூடிய மகா கூட்டணியுடன் களம்கண்டது.

2019, பாராளுமன்றத் தேர்தலில் வெறும் 34.5 சதவிகித வாக்குகளை பெற்று 12 பாராளுமன்றத் தொகுதிகளில் தோற்றுப் போன காங்கிரஸ் தற்பொழுது 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 45-க் கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் பாராளுமன்றத் தேர்தலில் கோஷ்டி காங்கிரஸ் கூட்டணி சுமார் 8 பாராளுமன்றத் தொகுதிகள் அளவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

 

congress



"அமித்ஷா 10 முறை ஜார்கண்டுக்கு வந்தார். மோடி 6 முறை ஜார்கண்டில் பிரச்சாரம் செய்தார். அதற்கொரு காரணம் உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் மேற்கு வங்கத்தையும் பீகாரையும் எல்லைகளாக கொண்ட மாநிலம். இதன் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்திலும் பீகாரிலும் பிரதிபலிக்கும் என்பதுதான். அவர்கள் நினைத்தது போலவே பீகார் -ஜார்கண்ட் எல்லைப் பகுதியில் பா.ஜ.க.வை லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வென்றுள்ளது. வங்காளிகள் நிறைந்த ஜார்கண்ட் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.


காங்கிரஸ் கூட்டணியில் இருந்த உறுதித் தன்மையின் காரணமாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரனை முதல்வர் என காங்கிரஸ் அறிவித்தது. வேலையின்மையும் வறுமையும் வாட்டி வதைக்கும் மாநிலத்தில் பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கைகளும் மற்றும் கடைசிக் கட்டமாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவும் ஒரு காரணம்'' என்கின்றன எதிர்க்கட்சிகள்.


ராகுல் -பிரியங்கா இருவரும் மாறி, மாறி பிரச்சாரம் செய்த ஜார்கண்டில் பெற்ற வெற்றி, "மறுபடியும் ராகுலை காங்கிரஸ் கட்சி தலைவராக்குங்கள்' என கமல்நாத் போன்ற சீனியர் தலைவர்களையே பேச வைத்துள்ளது.