'டன்கிரிக்' படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பலமுறை ரிலீஸ் தேதிகளில் மாற்றம் செய்து, வழியாக திரையரங்கங்கள் திறந்திருக்கும் நாடுகளில் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் திரைப்படம் வெளியானது. அந்த வாரமே 46 மில்லியன் டாலர்கள் வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் 'டெனெட்' திரைப்படம் வெளியானது. வெளியான முதல் வாரத்திலேயே 78.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளது. இப்படம் இதுவரை வசூலித்துள்ள மொத்த தொகை 146.2 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் கோடியாக இருக்கும்.
இன்னும் பல நாடுகளில் வருகின்ற வாரங்களில் ரிலீசாக இருக்கிறது. 200 மில்லியன் டாலர் மதிப்பில் எடுக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் வெளியானால் 500 மில்லியன் வசூல் ஈட்டும் என்று சொல்லப்படுகிறது.