Skip to main content

“இன்னும் நான்கு மாதங்களுக்கு நானே பார்த்துக்கொள்கிறேன்”- சிவகார்த்திகேயன்

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

white


சென்னையிலுள்ள வண்டலூர் பூங்கா, இந்தியாவிலுள்ள உயிரியல் பூங்காக்களில் அதிக அளவு விலங்கு மற்றும் விலங்கு வகைகளைக் கொண்ட பூங்காவாக இருக்கிறது.
 


இந்தப் பூங்காவில் சாதாரன பார்வையாளராக விலங்குகளைப் பார்த்துவிட்டு செல்பவராக இல்லாமல் பூங்காவில் இருக்கும் விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைத்துக்கொள்ளும் விதமாக “விலங்கு தத்தெடுப்பு” திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் வண்டலூரிலுள்ள பதினான்கு வெள்ளை புலிகளில் ஒன்றான அனு என்கிற புலியைக் கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். இந்த மே மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்ததையொட்டி, மேலும் நான்கு மாதங்களுக்குத் தத்தெடுத்துள்ளார். இந்தத் தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்