Skip to main content

“சும்மா வந்துவிட்டு போனால் மட்டும் பத்தாது” - மோடியை விமர்சித்த ரோகிணி

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
rohini about prime minister modi tamilnadu visit

சேலத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிறிய குழந்தைகள் முதல் 77வயதான முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். இந்த போட்டியை நடிகை ரோகிணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

அப்போது மோடியின் தமிழக வருகை குறித்து கேள்விக்கு, “பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்குத் தான் வருகிறார். தமிழ்நாடு, அவருக்கு அவ்ளோ பிடித்துவிட்டது போல. ஆனால் அப்படி இல்லை. தொடர்ந்து வந்தாலாவது தமிழக மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறார். அவரது பதவிக்குண்டான எல்லா மரியாதையையும் நாம் கொடுக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்துக்குத் தேவையான அனைத்துமே, ஒன்றிய அரசாங்கம் செய்தால் நல்லாயிருக்கும். சும்மா வந்துவிட்டு போனால் மட்டும் பத்தாது” என்றார். 

மேலும், “தாய் மொழி ரொம்ப முக்கியம் என மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த தாய் மொழியில் தான் நம் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழிகளை முன்னெடுத்து படித்தோமேயானால், அனைத்து மொழிக்கான முன்னேற்றமும் இருக்கும். நாம் நம்முடைய தாய் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும். அதை ஒவ்வொரு சிட்டிசனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கடமை” என்றார். 

சார்ந்த செய்திகள்