Skip to main content

"தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சிவராஜ்குமார், தமிழில் நீங்க தான்" - ரேஷ்மி சிம்ஹா

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Reshmi Simha speech at Vasantha Mullai Trailer Launch

 

முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ரேஷ்மி சிம்ஹா தயாரிப்பில் நடிகர் சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வசந்த முல்லை'. அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கஷ்மீரா பர்தேசி நடிக்க ஆர்யா மற்றும் ராக்‌ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். 

 

தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பேசுகையில், ''நீண்ட நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன். வெற்றி பெற்றிருக்கும்போது ஏராளமான வாய்ப்புகளும் நிறைய நண்பர்களும் உடனிருப்பார்கள். ஆனால், வெற்றிக்காக காத்திருக்கும்போது நம் மீது நம்பிக்கை வைத்து பயணிப்பவர்கள் குறைவு. அந்த வகையில் தயாரிப்பாளர் ராம் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கை இன்று வரை குறையவில்லை. தெலுங்கில் சிரஞ்சீவி சார், கன்னடத்தில் சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களின் மூலம் வெளியிட்டோம். ஆனால், தமிழில் பத்திரிகையாளர்களாகிய உங்கள் முன் வெளியிடுகிறோம். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டபோது மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

 

இயக்குநர் ரமணன் புருஷோத்தமா பேசுகையில், ''முகநூல் மூலமாக சிம்ஹா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு அவரை சந்தித்தேன். ஏதாவது கதைகளை வைத்திருக்கிறீர்களா? நாம் இணைந்து பணியாற்றலாமா? எனக் கேட்டார். அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான் இன்று எனக்கு கிடைத்திருக்கும் இந்த முதல் மேடை. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை தொடங்குவதற்கு ரேஷ்மி சிம்ஹா, ராம் தல்லூரி, ரஜினி தல்லூரி ஆகியோர் அளித்த நம்பிக்கையான வாக்குறுதியும் ஒரு காரணம்.

 

'வசந்த முல்லை' எனும் படத்தின் திரைக்கதையின் போக்கில் ஒரு திருப்புமுனைக்குப் பிறகு, இந்த கதை ஒரே இரவில் நடைபெறும். மலைப்பாங்கான பகுதி; இருட்டு; தொடர் மழை... இந்த பின்னணியில் நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு வியப்பை அளித்தது. அதிலும் குறிப்பாக நாயகி கஷ்மீரா பர்தேசி அந்த குளிரில் ஒவ்வொரு காட்சியிலும் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து நடிக்க வேண்டியதிருந்தது. முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அளித்த நாயகி கஷ்மீரா பர்தேசிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவராஜ்குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க கோரிக்கை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP's request to Election Commission against Shivarajkumar

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, கர்நாடாகாவில் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக அவரை ஆதரித்து சிவராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும்வரை சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. பாஜக ஓபிசி மோர்ச்சா பிரிவின் கர்நாடக மாநிலத் தலைவர் ரகு, எழுதியிருந்த கடிதத்தில், “கர்நாடாகாவில் ஒரு முக்கிய நபராக இருக்கும் சிவராஜ்குமார், தற்போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சினிமா மூலம் மக்கள் மத்தியில் பொதுவான ஆளுமை என்ற பெயரை பெற்றுள்ளார். ஜனநாயக முறையில், அவரது உரிமையை நாங்கள் மதிக்கிறோம். 

அதே சமயம், தேர்தல் நேரத்தில் தேவையற்ற ஆதாயங்கள் அல்லது செல்வாக்கைத் தடுப்பது மற்றும் சமநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அவரது குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் பிரபலத்தை கருத்தில் கொண்டு, திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவைகளில் தேர்தல் முடியும்வரை சிவராஜ்குமார் நடித்த படங்கள், விளம்பரங்களை ஒளிப்பரப்பபடுவதை தடை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வழக்கு - அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
prakash raj, bobby simha case update

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.