![gjgjgjg](http://image.nakkheeran.in/cdn/farfuture/FtQhBU6TztI0thyqCTYEQlWtt24v3OGAAEVD6UZQGjQ/1617433736/sites/default/files/inline-images/Raashi-Khanna-Instagram.jpg)
‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில், இவர் படங்களில் கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது...
![bggjug](http://image.nakkheeran.in/cdn/farfuture/vy8mtzk7bQgS0okG4HDw8n61pvicLBLTF4E45UNP43s/1617433771/sites/default/files/inline-images/sulthan%20ad_25.png)
"எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி வேடங்கள் கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். கதாநாயகியாக எங்களுடைய சினிமா வாழ்க்கை எங்கள் கையில் இல்லை. அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் மிகச் சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டால் போதும். மற்றவை தானாக அமைந்துவிடும். அதன் பிறகு நாங்களே நினைத்தாலும் தப்பாக எதுவும் செய்ய முடியாது. நூறு படங்கள் வந்தால் அதில் ஒன்றிரண்டு படங்களில்தான் கதாநாயகிக்குப் பெயர் கிடைக்கிற கதாபாத்திரங்கள் அமையும். அந்த மாதிரி கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதை தவிர எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது" என்றார்.