Published on 11/08/2018 | Edited on 11/08/2018
![nadigar sangam](http://image.nakkheeran.in/cdn/farfuture/FkwTZmnfbKw_n0415ioYov0p6Ri-a8E4rXciDbMe6fU/1534011318/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-08-11%20at%204.17.51%20PM.jpeg)
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.