Skip to main content

52 நாடுகளில், 14 மொழிகளில் வெளியாகும் கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட படம் !

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Kichcha Sudeep starring Vikrant Rona release date announced

 

'நான் ஈ' பட புகழ் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படம் ‘விக்ராந்த் ரோணா’. இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்  நடிக்கிறார். இப்படத்தை அனூப் பண்டாரி இயக்க, ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். நிரூப் பண்டாரி, நீதா அசோக் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.எஃப்’ பட புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார். பிரம்மாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும்  “விக்ராந்த் ரோணா”  திரைப்படம்,  3-D பதிப்பில்,  14 மொழிகளில், 55 நாடுகளில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

ad

 

இப்படம் குறித்து இயக்குநர் அனூப் பண்டாரி கூறுகையில், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவென்றே உருவாக்கப்பட்டது. இதன் பிரம்மாண்ட உருவாக்கமும் 3-D பதிப்பு தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். நாங்கள் அறிமுகம் செய்யும், உலகின் புதிய நாயகனை, விரும்பி ஏற்று ரசிக்கும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும அதிர்ஷ்டசாலிகள். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிரட்டுவதாகப் புகார் - திடீரென வாபஸ் வாங்கிய பிரபல நடிகை

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Jacqueline Fernandez withdraws plea against Sukesh Chandrashekhar's letters

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் 7 கோடி ரூபாய்க்கு மேல் குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு கடந்த ஆண்டு ஈஸ்டரை முன்னிட்டு ஒரு காதல் கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த கடிதங்களை நிறுத்தக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அதில் சுகேஷ் சந்திரசேகர், சிறையிலிருந்து கொண்டே மிரட்டி வருவதாகவும் அவர் எழுதும் கடிதங்கள் என் தனிப்பட்ட உரிமைகளைப் பாதிப்பதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார். மேலும் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா சுகேஷ் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் வாபஸ் பெற்றுள்ளார்.

Next Story

"அனைத்து போராட்டங்களிலும் நிற்பேன்" - காவிரி விவகாரம் குறித்து கிச்சா சுதீப்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

kiccha sudeep about cauvery issue

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு, காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. 

 

இதனிடையே காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கடந்த 21 ஆம் தேதி தெரிவித்தது. அந்த தீர்ப்பை ஏற்றுக் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விட்டது.

 

இதனால், கர்நாடக அரசைக் கண்டித்து அந்த மாநிலத்தில் கர்நாடக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 22 ஆம் தேதி மண்டியா, அத்திப்பள்ளி டோல்கேட், கிருஷ்ணராஜபுரம், மைசூரு வங்கி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை (25-09-23) பெங்களூருவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் துணை நிற்பதாகக் கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஆண்டும் காவிரி பிரச்சனை தொடங்கிவிட்டது. கன்னட ஆதரவு அமைப்புகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னட மொழியின் அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

 

பருவமழை பெய்யாததால், மக்களின் விவசாயம் மட்டுமின்றி விவசாயிகளின் குடிநீருக்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பருவமழையைத் தவிர வேறு குடிநீர் ஆதாரம் இல்லாததால் காவிரியை நம்பியுள்ளோம். நிபுணர்கள் கர்நாடகத்தின் தற்போதைய வறட்சி நிலையைப் பற்றி உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் தெரிவிக்க வேண்டும். தமிழக முதல்வர்களுடன் சுமுகமாகப் பேசி இந்தப் பிரச்சனைக்கு தற்காலிகமாகத் தீர்வு காண முடியும் என்று முந்தைய சில முதல்வர்களைப் போலவே நமது முதல்வர் சித்தராமையாவும் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அவர் தற்போதைய வறட்சி-தண்ணீர் பிரச்சனைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

 

தமிழக விவசாயிகளுக்குக் குறுவை பயிருக்குத் தண்ணீர் கிடைக்கட்டும். ஆனால் முதலில் கர்நாடகாவில் இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், கர்நாடகாவின் நிலைமையை மத்திய அரசுக்குப் புரிய வைக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நமது தண்ணீர் நமது உரிமை" எனக் குறிப்பிட்டுள்ளார்.