Skip to main content

“அதைவிட சில மனிதர்கள் ஆபத்தானவர்கள்”- கார்த்திக் சுப்புராஜ் கோபம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
karthick subbaraj

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாகவும், அரசின் விதிமுறைகளின்படி, குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில், “சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. மனிதநேயத்திற்கு அவமானம். குற்றம்சாட்டப்படும் அதிகாரிகளுக்குத் தக்க தண்டனை வழங்கி இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நீதி கிடைக்க வேண்டும். வைரஸ்களைவிட சில மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்