சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும், போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடக பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாக பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்த சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்து தெரிவிப்பார்கள்.
அந்த வகையில் நடிகரான சௌதரராஜன் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால், துவேஷம் பெறுமேயன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ” என்று கூறியிருக்கிறார்.