Skip to main content

கபாடின்னு வந்தா நாங்கதான் கிங்! - வெளுத்துவாங்கிய இந்திய அணி

Published on 04/07/2018 | Edited on 04/07/2018

"தொட்டு பாரு நாங்க தாருமாறு" என்ற டயலாக் ப்ரோ கபாடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் ப்ரோமோவுக்காக சொல்லப்பட்டது. ஆனால், கபாடி என்றாலே நாங்க தாருமாறுதான்னு நிரூபிச்சிருக்காங்க இந்திய கபாடி அணி.
 

kabbadi

 

 

 

கபாடி மாஸ்டர்ஸ் லீக் 2018 துபாயில் கடந்த ஜூன் 22ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜெண்டினா, ஈரான் மற்றும் கென்யா ஆகிய ஆறு அணிகள் களமிறங்கின. பாகிஸ்தான் - இந்தியா இடையே நடைபெற்ற முதல் போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது இந்திய அணி. அதேபோல், தொடர் தொடங்கியதில் இருந்தே இந்தியா மற்றும் ஈரான் அணிகளே ஆதிக்கம் செலுத்திவந்தன. மற்ற அணிகளும் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றாலும், அந்த நாடுகளுக்கு கபாடி புதிதென்பதால் பெரிதாக ஜொலிக்கவில்லை.
 

அதேபோல், கபாடியில் நாங்கதான் கிங் என நிரூபிக்கும் விதமாக லீக் தொடக்கத்தில் இருந்தே அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றது இந்திய அணி. மற்றொரு பலமான அணியான ஈரானும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று இந்திய அணியை எதிர்கொண்டது. என்னதான் மற்ற நாடுகளுடன் ஆடினாலும், இந்தியாவிடம் அதன் ஜம்பம் பலிக்கவில்லை. முதல் சுற்று முடிவில் ஈரான் 11 புள்ளிகளுடனும் இந்தியா 18 புள்ளிகளுடனும் முன்னிலையில் இருந்தது. ஈரான் எவ்வளவு கடுமையாக விளையாடுனாலும் இந்திய அணிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. இறுதிச்சுற்றில் 44 - 26 என்ற புள்ளிக்கணக்குடன் இந்திய அணி இந்த ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த கபாடி மாஸ்டர் வெற்றி என்பது எங்களுக்கு ஆசிய போட்டிகளுக்கான அரையிறுதியைப் போன்றது என தெரிவித்திருந்த இந்திய அணிக்கு இது மிகமுக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

- செந்தூர்பாண்டி

மாணவ பத்திரிகையாளர்