Skip to main content

ஐசிசி அறிவித்துள்ள புதிய விதி... தப்பித்த கேப்டன்கள்... சிக்கிக்கொண்ட வீரர்கள்...

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிகளில் ஐசிசி அமைப்பு தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது.

 

icc

 

 

அதன்படி, காயம் காரணமாக ஒரு வீரர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதிலாக வரும் மாற்று வீரரும் பேட்டிங், பவுலிங் செய்யலாம் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய விதி ஒன்றை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு போட்டியில், ஒரு அணி தாமதமாக பந்துவீசினால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் இவ்வாறு நிகழ்ந்தால், அந்த அணியின் கேப்டன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது ஐசிசி இந்த விதியை மாற்றியுள்ளது.

தாமதாக பந்துவீசும் அணியின் அனைத்து வீரர்களுக்கும் இனி ஒரே மாதிரியான தண்டனை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி இனி அபராதமானது கேப்டனுக்கு மட்டுமின்றி அணியின் அனைத்து வீரர்களுக்கும் சேர்த்தே விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.