தமிழ் யூ-ட்யூப் வட்டத்தில் மிக வெற்றிகரமாகத் திகழும் 'பிளாக் ஷீப்' சேனலின் முக்கிய அங்கம், யூ-ட்யூபில் வளர்ந்து, பிஸியான தொகுப்பாளராகி இப்போது சினிமாவிலும் தொடர்ந்து நடித்துவரும் விக்னேஷ்காந்த்திடம் புதுசா யூ-ட்யூப் சேனல் ஆரம்பிக்குற இளைஞர்களுக்கு, எப்படி இந்த டிஜிட்டல் மீடியாவை எப்படி பயன்படுத்தணும், எப்படி வளரலாம் என்று டிப்ஸ் கேட்டோம்...
ஒரு முக்கியமான கண்டன்ட், இதை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கணும்னு ஒரு வீடியோ பண்ணுனா அதை 1 லட்சம் பேர்தான் பார்ப்பாங்க. அதே ஒரு கில்மா கண்டன்ட், வெளியே ஒரு தலைப்பு உள்ள வேற மேட்டர் இருந்தா அதை 10 லட்சம் பேர் பாத்துடுறாங்க. இது மாதிரியான சூழலில் சேனலோட தன்மையையும் ஆடியன்ஸோட தன்மையையும் புரிஞ்சுக்கிட்டு நாம சொல்ல நினைப்பதையும் கலந்து சொல்வதுதான் டிஜிட்டல் மீடியாவுல வீடியோ பண்றதுக்கான ஒரே சாத்தியம். இப்பக்கூட ப்ளாக் ஷீப்ல ‘ஜால்றா’னு ஒரு நிகழ்ச்சி பண்றோம். அந்த நிகழ்ச்சியோட நோக்கம் இதுதான். இப்ப நாம யாரவேணும்னாலும் கலாய்க்க முடியுது. பேச்சு சுதந்திரத்தை முழுசா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டோம், அதே நேரத்துல அதை தவறா பயன்படுத்தவும் ஆரம்பிச்சுட்டோம். இதை உணர்த்துவதுதான் அந்த நிகழ்ச்சியோட நோக்கம். தி.மு.க இந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில எவ்வளவோ திட்டங்களை கொண்டுவந்துருக்காங்க அதையெல்லாம் மறந்துட்டு இப்போ இருக்க நிலைமைய மட்டும் வச்சு அவங்கள கலாய்க்குறோம். முன்னாடியெல்லாம் எம்.ஜி.ஆர் ஒரு ஐகான், அவரை யாருமே கலாய்க்க மாட்டாங்க. சூப்பர் ஸ்டாரை கலாய்ச்சு எந்த மேடையிலும் பேசிட முடியாது. ஆனா இப்போ அவரை கலாய்க்காத மேடைகளே இல்லை. யார வேணும்னாலும் கலாய்க்கலாம். ஆனால், அவங்க இந்த இடத்துக்கு வர எவ்வளவு உழைச்சுருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டு கலாய்ங்க.