Published on 02/03/2020 | Edited on 02/03/2020
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். தற்போது பதிவிக்காலம் நிறைவடைய இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து, தேர்தல் நடத்த கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில்தான் கலைக்கப்பட முடியும். இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் தற்போது நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.