Published on 03/05/2025 | Edited on 03/05/2025

காட்பாடி அருகே விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை தரதரவென இழுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாலை விபத்தில் இறந்த நபரின் உடல் ஒன்று பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாதமாக வைக்கப்பட்டிருந்த இந்த உடலுக்கு யாரும் உரிமைகோராத நிலையில் அரசு சார்பில் அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. பெட்சீட்டால் கட்டப்பட்டு கிடந்த நாள்பட்ட சடலத்தை புதைக்கும் ஊழியர்கள் மண்தரையில் தரதரவென இழுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.