ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் தங்களது ஆட்சியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஆட்சி தொடர்பான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகிவருகிறது. இதற்கிடையே, பாஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தலிபான் அமைப்பு தற்பொழுதுத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான் அரசின் புதிய பிரதமராக முல்லாஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான் அரசின் புதிய தலைவராக முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தலிபான் அரசின் உள்துறை அமைச்சராக சிராஜூதீன், பாதுகாப்பு அமைச்சராக ஹக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தலிபான் அரசின் துணைத் தலைவராக அப்துல் கனி பராதர் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.