கரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட மூன்று நாடுகளுடனான விமானசேவைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சவுதி.
கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்த சூழலில், தற்போது பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமைப்படுத்தி விமான சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன சர்வதேச நாடுகள். அந்தவகையில் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளுக்குக் குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக இந்தியா உட்பட மூன்று நாடுகளுடனான விமானசேவைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சவுதி.
அந்நாட்டு அரசின் அறிவிப்பின்படி, இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கான விமானசேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய காரணங்களுக்காகச் சவுதி அரசின் அனுமதிபெற்றவர்கள் மட்டுமே தற்போதைக்கு இந்த நாடுகளிலிருந்து சவுதிக்கு வரமுடியும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.