Published on 08/01/2021 | Edited on 08/01/2021
கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவருகிறது. பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசும், அக்காய்ச்சல் பரவியுள்ள மாநிலங்களின் அரசுகளும் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
கேரள அரசு, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது. இக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடியது என்பதால், மற்ற மாநில அரசுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவருகின்றன.
இந்தநிலையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, நேபாள நாடு, இந்தியாவிலிருந்து கோழி மற்றும் அதுசார்ந்த பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது. நேபாளத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.