Skip to main content

நிலவில் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய திட்டம்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு 'ஆர்ட்டிமிஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2024 ஆண்டுக்குள் நிறைவேற்ற நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான நிதியை அமெரிக்கா அரசு அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவலை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் "ஆர்ட்டிமிஸ்" என்றால் கிரேக்கத்தில் "நிலாப் பெண்" என்று அர்த்தம். அதனைத் தொடர்ந்து நிலவில் மனிதன் இறங்கி ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில் , தற்போது இத்திட்டத்தை நாசா முன்னெடுத்திருப்பதை உலக நாடுகளும் வரவேற்றுள்ளனர்.

 

NASA

 

 

இது வரை நிலவில் 12 மனிதர்கள் மட்டுமே தரையிறங்கி இருப்பதாகவும், அதில் அனைவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால்  நாசாவின் இந்த திட்டத்திற்கு அமெரிக்கா அதிபர் சுமார் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை அதிகரித்து வழங்கியுள்ளதால் , நாசாவின் கட்டமைப்பு பணிகள் , தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்த உள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலவில் இதுவரை பெண் தரையிறங்கியதே இல்லை என்பது அனைவரும் அறிந்தது.சர்வதேச அளவில் தொழில் நுட்ப தகவல்களை பல்வேறு நாட்டு அரசுக்கு வழங்கி வருவதில் நாசா முதலிடம் வகிக்கிறது. விண்வெளியில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படங்கள் மூலம் உலகிற்கு செய்திகளை வழங்கி வருகிறது நாசா என்றால் மிகையாகாது.

 

 

 

சார்ந்த செய்திகள்