Published on 08/09/2022 | Edited on 08/09/2022
சார்ஜர் இல்லாமல் ஐ போன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு.
சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் தங்களால் செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்தது. ஆனால் சாம்சங் தனது புதிய போனை சார்ஜர் உடன் விற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு, சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.