Published on 26/04/2020 | Edited on 26/04/2020
உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,20,914ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,03,269ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் உலக வல்லரசுநாடான அமெரிக்காவில் கரோனா வைரஸ் தாக்கம் விஸ்பரூபம் எடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையோடு 50,000-ஐ தாண்டியது. தற்போது புதிதாக 30,570 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60,651 ஆக உயர்ந்துள்ளது.